மீண்டும் கௌதாரிமுனைக்கு படகு!யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலிருந்து கௌதாரிமுனைக்கு கடல்வழியாக பயணிகள் படகு சேவையை மேற்கொள்ளக்கூடிய சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுவருகின்றது

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனைக் கிராமம் நீண்டகாலமாகவே தரைவழிப் போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பிரதேசமாக இருந்து வருகிறது. 

யாழ்-மன்னார் ஏ32 வீதியில் பரமங்கிராய் பகுதியிலிருந்து கௌதாரிமுனைக்குச் செல்லும் சுமார் 14 கிலோமீற்றர் நீளமான வீதி மிக மோசமான நிலையில் நீண்ட காலமாகக் காணப்படுவதால், இந்தப் பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். 

குறிப்பாக இந்தப் பகுதியில் உள்ள விநாசியோடை மகா வித்தியாலயத்தில் பணியாற்றுவதற்காக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து சென்று வரும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இதனால் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். 


No comments