யாழில் 57 வருடங்களின் பின்னர் இருவருக்கு பேடன் பவல் விருது


சாரணர் இயக்கதின் இளைஞர் சாரணிய பிரிவாக செயற்படும் திரிசாரணர் பிரிவில் வழங்கப்படுகின்ற உயரிய விருதான பேடன் பவல் விருது, 57 வருடங்களின் பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் திரிசாரணர்கள் இருவரிற்கு  கிடைக்கப்பெற்றுள்ளது.

சாரணர் இயக்கத்தின் பேடன்பவல் பிரபுவின் பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கை சாரணர் சங்கத்தினால் மாத்தளை மாவட்ட செயலகத்தில் மாத்தளை மாவட்ட செயலகத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த விசேட நிகழ்வொன்றிலேயே இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் குறித்த விருதுகளை

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் திரிசாரணர் குழுவில் சிறப்பாக செயற்பட்டு அனைத்து தகைமைகளையும் நிறைவு செய்த யோ.சுதர்சனன் மற்றும் ப.சாரங்கன் ஆகியோருக்கு வழங்கி வைத்தார்.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி 200வது ஆண்டினை இவ்வருடம் கொண்டாடும் நிலையில் இவ்விருது 57வருடங்களின் பின்னர் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments