85 வயதில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரான பௌசி!
ஏ.எச்.எம். ஃபௌசி பாராளுமன்ற உறுப்பினராக இன்றைய தினம் வியாழக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
முஜிபுர் ரஹ்மான் ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஏ.எச்.எம். ஃபௌசி இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
முஜிபர் ரஹ்மான் இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், ஏ.எச்.எம்.பௌசி 48,701 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இதன்படி, அவர் பட்டியலில் 07வது இடத்தைப் பெற்றிருந்தார்.
முன்னாள் கொழும்பு மேயரான ஏ.எச்.எம்.பௌசிக்கு தற்போது 85 வயதுதாகும்.
Post a Comment