போலி பொலிஸார் கைது ; கைவிலங்கு உள்ளிட்டவை மீட்பு!


பொலிஸ் சீருடையுடன் காரில் பயணித்த போலி பொலிஸார்  நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

  நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஇம்புல பகுதியில், பயணித்த கார் ஒன்றினை நிட்டம்புவ பொலிஸார்  சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது காருக்குள் பொலிஸ் சீருடை அணிந்த 4 பேர் இருந்துள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்ல என்பதை அறிந்த பொலிஸார், நால்வரையும் கைது செய்ததுடன், அவர்கள் பயணித்த காரினையும் கைப்பற்றினர். 

காரினை சோதனையிட்ட போது, காரினுள் இருந்து, இரண்டு கைவிலங்குகள் மற்றும் 3 போலி இலக்கத் தகடுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 26, 27 மற்றும் 42 வயதுடைய நிட்டம்புவ, முல்லேரிய, கிந்தோட்டை மற்றும் எல்லக்கல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.   

No comments