சாவகச்சேரி மதுவரி திணைக்களத்திற்கு அருகில் மதுபானம் விற்றவர் பொலிஸாரினால் கைது!


மதுவரி திணைக்களத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த நபரை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பௌர்ணமி தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி மது வரி திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் நபர் ஒருவர் மதுபான விற்பனையில் ஈடுபட்ட வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டு , சோதனை நடத்தினர். 

அதன் போது வீட்டில் இருந்து பியர் மற்றும் சாராயம் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டதுடன் அங்கிருந்த நபரை மதுபானம் விற்பனை செய்த குற்றத்தில் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபரையும் , மீட்கப்பட்ட மதுபானங்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாவகச்சேரி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments