சுற்றுலா சென்ற தந்தையும் இரு பிள்ளைகளும் நீரில் மூழ்கி உயிரிழப்பு




சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிலாபம் முகத்துவாரத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பை சேர்ந்த 7 வயது மகள், 6 வயது மகன் மற்றும் 35 வயதுடைய தந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சிலாபம் முகத்துவாரத்திற்கு படகில் சென்ற இவர்கள் படகில் இருந்து இறங்கி அங்கு நீராடச் சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments