உலக ஈர நிலங்கள் தினம் நாளை!


உலக ஈரநிலங்கள் தினம் நாளைய தினம் வியாழக்கிழமை (பெப். 02) கொண்டாப்படவுள்ளது. அதனை முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் ஈரநிலங்களின்  முக்கியத்துவம் அதன் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் Green Forest Globe அமைப்பின் அனுசரணையில் திருகோணமலை கலைமகள் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் நா.காளிராசா  தலைமையில் விழிப்புணர்வு செயற்திட்டம் நடைபெற்றது. 

இந்நிகழ்வின்  வளவாளராக சூழலியலாளர் ம. சசிகரன் கலந்து கொண்டதுடன்.  பிரதம அதிதியாக திருகோணமலை கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் k.ஊர்மிளா , சிறப்பு விருந்தினராக Green Forest Globe தலைவர் T .மேரி லியூஜின் , கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments