யாழ்.பல்கலை முன்றலில் போராட்டம்


அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை இப் போராட்டம் இடம்பெற்றது.  

இதன் போது "அநீதியான வரிவிதிப்பை நிறுத்து", "அரசின் ஊழலால் விழுந்தவர்களை வரி ஏறி மிதிக்கிறது", "பணத்தை எடுத்தவரிடம் கேட்பதே நீதி எங்களிடம் கேட்பது அநீதி" போன்ற பதாகைகளை ஏந்தியாவாறு  விரிவுரையாளர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments