சட்டத்தரணி மு. றெமீடியஸ்க்கு மாநகர சபையில் இன்று அஞ்சலி ; நாளை இறுதி நிகழ்வு!


வீதி விபத்தில் சிக்கி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு. றெமீடியஸ்க்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மாநகர சபை கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டதுடன், மாநகர சபை உறுப்பினர்கள் , உத்தியோகஸ்தர்கள்,  ஊழியர்கள் இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தினர். 

அதேவேளை சட்டத்தரணி மு.றெமீடியஸின் இறுதி கிரியைகள் நாளைய தினம் புதன்கிழமை பிரதான வீதி , யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்று , மாலை 3 மணியளவில் பாசையூர்  அந்தோனியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு , யாழ்ப்பாணம் சென் மேரி சேமக்காலையில் உடலம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

யாழ்.மாநகர சபை உறுப்பினரும் பிரபல மூத்த சட்டத்தரணியுமான மு. றெமீடியஸ் கடந்த 7ஆம் திகதி சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை நாய் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளான நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

No comments