யாழ்.மாநகர சபை உறுப்பினரின் உயிரிழப்பு ; கட்டாக்காலிகளை கட்டுப்படுத்துமாறு சபையில் கோரிக்கை!


யாழில் தெருநாய்கள் கட்டாக்காலி மாடுகளை மாநகரசபை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்யாழ் மாநகர சபை உறுப்பினர் து,இளங்கோ யாழ் மாநகர சபை அமர்வில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்று யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ம் ஆண்டு பாதீடு சபையில் சமர்ப்பிப்பதற்கான விசேட அமர்வு முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் இடம் பெற்றது

குறித்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஈபிடிபி உறுப்பினர் இளங்கோ மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்திருந்தார்

நாய்களை கட்டுப்படுத்துங்கள் வீதிகளில் திரிகின்ற நாய்களை யாழ் மாநகர சபை கட்டுப்படுத்த வேண்டும் அத்தோடு மாடுகளையும் கட்டுப்படுத்த வேண்டும் இந்த விடயத்தில் உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். 

அதேவேளை யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு. றெமீடியஸ் , மோட்டார் சைக்கிளில் பயணித்த போது , வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments