காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவு !
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் தொடரும் வீதிப் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைகின்றது.

இதனை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பமான இப்போராட்டம் அங்குள்ள யுத்த நினைவு சின்னம் வரை இடம்பெற்றது.

இதன்போது, தமது கைகளை கட்டியவாறு, தமது உறவுகளின் படங்களையும், கறுப்பு கொடிகளையும் கரங்களில் ஏந்தி உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


No comments