போதை வியாபாரியிடம் போதைப்பொருள் கேட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட 50 பேருக்கு வலை வீச்சு


போதைப்பொருளை விற்பனை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைதான இளைஞனிடம் தொலைபேசியில் போதைப்பொருள் கேட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உள்ளிட்ட 50 பேரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

உடப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருளை விற்பனை செய்ய முயற்சித்த குற்றத்தில் 23 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். 

இந்நிலையில் , இளைஞன் கைதான விடயம் தெரியாது , இளைஞனிடம் போதைப்பொருள் தருமாறு தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்து கேட்டுள்ளனர். 

இளைஞனிடம் தொலைபேசியில் போதைப்பொருள் கேட்டவர்கள் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உள்ளிட்ட 50 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

No comments