வரி கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும்


வரி கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

அரச நிறுவனங்கள் அனைத்தையும் மறுசீரமைக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.

எனினும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஒரு சில கடுமையான தீர்மானங்களை செயற்படுத்த வேண்டியுள்ளது.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்காவிடின் அதன் சுமையை நாட்டு மக்கள் சுமக்க நேரிடும். அதனால் பொருளாதார மீட்சியை இலக்காகக் கொண்டு புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வரி திருத்தங்கள் ஒரு தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். வரி கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என மேலும் தெரிவித்தார். 

No comments