இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் றோகினி மாரசிங்க தலைமையிலான ஆணைக்குழுவின் உயர்மட்ட குழு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

குறித்த குழுவில் விசாரனைப் பணிப்பாளர், சட்ட வல்லுநர் ஆகியோரும் வருகை தந்திருந்தர்.

குறித்த குழுவினர் யாழ்.மாவட்ட மத தலைவர்களுடன் சந்திப்பினை மேற்கொண்டார். அதன் போது, 

போதை பொருள் பாவனை ஈடுபட்டவர்களுக்கு புனர்வாழ் அளித்தல். சமய நிறுவனங்கள் புனர்வாழித்தலுக்கு எவ்வாறு உதவ முடியும் ? , இது குறித்து மனித உரிமை ஆணைக்குழு எவ்வாறு உதவ முடியும் ? என்பது தொடர்பாக கருத்துரையாடல் இடம் பெற்றது.

அத்துடன் வடமாகணத்தில் உள்ள மூன்று பிரதிப் பொலீஸ்மா அதிபர்களுடனும் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது,

தற்போது வடமாகாணத்தில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாகவும் இதே போல பெலிசாருக்கு கிடைக்கின்ற முறைப்பாடுகள் தொடர்பிலும் பல்வேறு பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.


No comments