நெடுந்தீவில் வாடி எரிப்பு ; 15 இலட்ச ரூபாய் பொருட்கள் தீக்கிரை!
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்தொழிலாளரின் வாடி விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

நெடுந்தீவை சேர்ந்த பாக்கியநாதர் எயுசேவியர் என்பவரின் வாடியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

அதன் போது வாடியினுள் இருந்த கடற்தொழில் உபகரணங்கள் உள்ளிட்ட சுமார் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் நெடுந்தீவு 2ஆம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிடும் பாக்கியநாதர் எயுசேவியர் என்பவரின் வாடியே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

No comments