ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சதீஸ்குமார் தொடர்ந்தும் சிறையில்


ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு அளிக்கப்பட தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.  

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு உதவினார் எனும் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட செல்லையா சதீஷ்குமாருக்கு கடந்த 1ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது.

சதீஸ்குமாரின் நிலைமை தொடர்பில் கேட்ட போதே கோமகன் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக செல்லையா சதீஸ்குமார் மேன் முறையீடு செய்திருந்தார். அதனால் , மேன் முறையீட்டை மீள பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. 

மேன் முறையீட்டை மீள பெறுவதற்கான நடவடிக்கைகள் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் திகதி நீதிமன்றில் மேல் முறையீட்டை மீள பெற்று இருந்தார். 

அந்நிலையில் அது தொடர்பிலான ஆவணங்களை நீதிமன்ற பதிவாளரிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு தாமதங்கள் ஏற்பட்டமையால் , இன்றைய தினம் சனிக்கிழமை வரையில் அவர் தொடர்ந்து சிறைச்சாலையிலையே தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார். 

No comments