அங்கஜனிடம் இருந்து பறித்து டக்ளஸிடம் கொடுத்த பதவி ; புத்துயிர் பெரும் அலுவலகம்


யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் துப்பரவு செய்யப்பட்டு , அதற்கு புத்துயிர் அளிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக செயற்பட்ட போது , ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் அவரது கட்சியான சுதந்திர கட்சியின் நீல நிற வர்ணத்தில் நில விரிப்புக்கள் , ஜன்னல் , கதவு திரைச்சீலைகள் நில நிறத்தில் காணப்பட்டது. பின்னர் ஒருங்கிணைப்பு குழு கலைக்கப்பட்டதை அடுத்து, அலுவலகம் செயலிழந்து காணப்பட்டது. 

இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டதனை அடுத்து, இன்றைய தினம் மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் தூசி தட்டப்பட்டு துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

No comments