வைரவரை அகற்றி புத்தரை அமர்த்திய ஆர்மி
கடந்த 33 வருடங்களாக ஆலயம் அமைந்திருந்த பிரதேசம் இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பிரதேசம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டது.
அதனை அடுத்து ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு மக்கள் சென்ற போது, இராணுவத்தினர் ஆலயத்தின் மூலவரான வைரவரை அகற்றி விட்டு , புத்தர் சிலைகளை வைத்து வழிபாடு நடாத்தி வந்துள்ளார்.
அது மாத்திரமின்றி ஆலய சூழல்களில் பௌத்த மதத்தினை அடையாளப்படுத்தும் கொடிகள் கட்டப்பட்டு காணப்பட்டதுடன் , ஆலய சுவர்களில் புத்தரின் ஓவியங்களும் வரையப்பட்டு காணப்பட்டது.
அத்துடன் ஆலய வாசலில் சத்திர வட்டக்கல்லின் தோற்றத்தில் கல்லும் பாதிக்கப்பட்டு காணப்பட்டது.
அதேவேளை கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலய பிரதேசங்களில் உள்ள இந்து ஆலயங்களில் திருடப்பட்டு, கொழும்பிற்கு கடத்தி சென்று விற்பனை செய்த 20 சிலைகளை காங்கேசன்துறை பொலிஸார் மீட்டு வந்திருந்தனர்.
அது தொடர்பிலான பொலிஸாரின் விசாரணைகளில் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் தொடர்பு பட்டு இருந்ததாக தெரிய வந்த நிலையில் குறித்த விசாரணைகள் எவ்வித முன்னேற்றமும் இன்றி கைவிடப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Post a Comment