துப்பாக்கி சூட்டில் பெண் உயிரிழப்பு ; படையினர் இருவர் கைது!


கொழும்பு, வனாத்தமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, படையினரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, படையினரின் துப்பாக்கி தவறாகச் சுட்டதில், வீட்டில் இருந்த, 25 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரு படையினரை கைது செய்துள்ளனர். 

No comments