யாழில் இராணுவ பாதுகாப்புடன் பொங்கல்


யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் மேற்கொண்டதை அடுத்து யாழ்ப்பாணம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

நல்லூர் சிவன் ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். 

அதன் போது யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் , நல்லூர் வைமன் ஆலயத்திற்கு முன்பாக பொங்கல் இடம்பெற்ற வேளை ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு இருந்தனர். 

No comments