நேபாளத்தில் விமான விபத்து - 68 பயணிகள் உயிரிழப்பு


நேபாளம்–பொங்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

காத்மண்டு விமான நிலையத்திலிருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 68 பயணிகளுடன் பொங்காரா நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில், சுமார் 30 விமான விபத்துக்கள் நேர்ந்துள்ளதோடு கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments