தேர்தல் சாம்பார் தயார்!

உள்ளூராட்சி தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரனுடன் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் இணைந்து போட்டியிடவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

வி.மணிவண்ணன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்புக்கு பின்னர் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 

இதனிடையே தமிழர்களைப்பொறுத்த வரையில் ஒற்றுமையின் சின்னம் வீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அனைத்து கட்சிகளையும் பயன்படுத்தி வீட்டுச்சின்னத்திற்கான அங்கீகாரத்தை எடுத்துவிட்டு ஒரு கட்சி தனியே போட்டியிடுவது என எடுத்த தீர்மானம் மீளாய்வு செய்யப்படவேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் உபதலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார். 

கூட்டமைப்பினில் தனித்து போட்டியிடுவதென தமிழரசு கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்ப்புக்குரல்கள் எழ தொடங்கியுள்ளது.

இதனிடையே நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி திருகோணமலை ,மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களிலும் ,யாழ்ப்பாணத்தில் சில உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் பொலனறுவை மாவட்டத்தில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தனித்துவமாக படகு சின்னத்தில் போட்டியிட போவதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்

அதேவேளை ஈரோஸ் எனப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணி உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வடகிழக்கில் தனித்துவமாக களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


No comments