நாய் வாலை நிமிர்த்த முயற்சி!தமிழ் தேசியத்தின் நிரந்தர தீர்வுக்காக தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றுபட வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முன்னாள் போராளியொருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் பேராளியும் சமூக செயற்பாட்டாளருமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் என்பவரே இன்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இவரது தந்தை நாட்டுப்பற்றாளராகவும், மூன்று சகோதரர்கள் மாவீரர்களாகவும் உள்ள நிலையில், இவரும் முன்னாள் போராளியாக இருந்து புனர்வாழ்வு பெற்று தற்போது சமூக செயற்பாட்டாளராக உள்ளார் என தெரியவந்துள்ளது.

ஏற்கனவே வடகிழக்கு ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் தமிழ் கட்சிகளது ஒற்றுமையினை வலியுறுத்தி தொடர்போராட்டங்களை ஆரம்பித்துள்ளது.

வுடகிழக்கில் மாவட்டங்கள் தோறும் தொடர்கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே தமிழ் தேசியத்தின் நிரந்தர தீர்வுக்காக தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றுபட வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தை முன்னாள் போராளியொருவர் ஆரம்பித்துள்ளார்.


No comments