ஈபிடிபி நிகழ்சியான ரணில் வருகை!

 


  

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்திருந்த நிலையில் வரவேற்பு நிகழ்வு முழுவதும் ஈபிடிபி கட்சி நிகழ்ச்சியாகியிருந்தது.

முன்னதாக இலங்கை ஜனாதிபதியினை வடக்கு மாகாண ஆளுநர் , கடற்தொழில் அமைச்சர் ஆகியோர் வரவேற்றிருந்தனர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலையில் பலாலி படை தலைமையகத்தில் முப்படையினரை சந்திந்தித்து இராணுவ அணிவகுப்பு மரியாதையினை ஏற்றிருந்தார்.

மாலை நல்லூர் சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்விலும் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் சிறப்புரை ஆற்றவருகை தந்தபோதே எதிர்ப்புக்களை எதிர்கொண்டார். 

இதனிடையே கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தேசியம் சார்ந்த கட்சிகள் நிராகரித்திருந்த நிலையில் நிகழ்வு ஈபிடிபி கட்சி நிகழ்வாகியிருந்தது.

டக்ளஸ் மற்றும் அவரது கட்சியினரால் மண்டபம் நிறைந்திருந்த போதும் இதுவரை ரணிலுக்கு முண்டுகொடுத்த கூட்டமைப்பு கும்பல் பதுங்கிக்கொண்டது.
No comments