மாவிட்டபுரத்தில் விபத்து - இளைஞன் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் மாவிட்டபுரம் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த தா.தினேஷ் (வயது 27) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

  பட்டா வாகனம், துவிச்சக்கர வண்டியில் சென்ற இளைஞனை மோதியதிலையே விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பாக காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தினை தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


No comments