அரை அவியலும் யாழ்ப்பாணத்து புனிதமும்!

 


காலத்திற்கு காலம் அரை அவியல்கள் தோன்றுவதும் அதனை வேலையற்ற ஊடகங்கள் ஊதிப்பெருப்பிப்பதும் வழமையாகும்.

யுத்த காலங்களில் மனித உரிமைகள் பேரில் தனியார் நிறுவனம் நடத்தியவர் படத்திலுள்ள மோகன்.வெளிநாட்டிற்கு தப்பித்து செல்லும் தமிழ் இளைஞர்களிற்கு அகதி அந்தஸ்த்து பெற சிபார்சு கடிதம் கொடுத்து கோடீஸ்வரனான இவர் பின்னர் வாசுதேவ அமைச்சராக இருக்கையில் அவருடன் ஒட்டிவாழ்ந்தார்.

பின்னர்  பலாலி இராணுவ முகாம் முகவராகி தற்போது இந்து பௌத்தமென கல்லாகட்டுவது தொழிலாளிகியுள்ளது.

ஏற்கனவே நாகவிகாரையில் புதிய ஆளுநரிற்கு கண்டிய நடனம் காண்பித்த அவர்  தற்போது காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட நீர் மூலம் யாழ்ப்பாணம் புனிதப்படுத்தபட்டு இருக்கிறதாக அவிழ்த்துவிட்டுள்ளார்.

இந்திய துணை தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் மற்றும் நாக விகாரை பௌத்த  விகாராதிபதி ஆகியோர் காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை அராலி குளத்தில் கலந்து யாழ்ப்பாணத்தை புனிதப்படுத்தி இருக்கின்றார்கள் 

முதலாம் ராஜேந்திர சோழன் புனித கங்கையில் இருந்து கொண்டு வைத்த  கங்கை நீர் மூலம் தனது சோழர் கால தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தை புனித படுத்தியதாக வரலாற்று பதிவுகள்  இருக்கின்றன 

அந்த வகையில் காசியில் இருந்து பெறப்பட்ட  நீர் மூலம் யாழ்ப்பாணம் தற்போது புனிதமாகி இருக்கின்றதென புதிய உருட்டல்கள் தொடங்கியுள்ளது.ஆயுத படையினரின் வன்முறை தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக மதத்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.


யாழ்ப்பாணத்தில், தேசிய பொங்கல் எனும் பெயரில் இலங்கை ஜனாதிபதி ரணில் அவர்களினால்; பொங்கல் தினத்தில் (15.01.2023) சர்வதேசத்திற்கும், சிங்கள மக்களுக்கும் அரங்கேற்றப்பட்ட நாடகத்தை தோலுரித்துக்காட்டும் விதமாக யாழ் பல்கலைகழக மாணவர்களால் அமைதிவழி பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட வயோதிபத்தாய்மார்கள், சிறுவர்கள், பெண்கள், மதத்தலைவர்கள் மற்றும் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப்பிரயோகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தமிழர் தாயகப் பகுதியில் தமிழ் மக்கள் ஆகிய நாம் சுதந்திரமாக நடமாட முடியாமலும், எமது அரசியல் நிலைப்பாட்டினை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாமலும் தொடர்ச்சியான அடக்குமுறைக்குள்ளேயே கடந்த பதின்மூன்று வருடங்களாக வாழ்ந்து வருகின்றோம். எமது உறவுகளைக் கொன்று குவித்த, காணாமல் ஆக்கிய, எமது நிலங்களை ஆக்கிரமித்து நிற்கும் ஆயுத படையினரும், புலனாய்வாளர்களும் தொடர்ச்சியாக எமது மக்களை அச்சுறுத்தியும், அவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்தும் ஒடுக்கு முறைகளை பிரயோகித்தே வருகின்றனர். ஆனால் தைப்பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் மீது நேரடியாகவே தாக்குதலினை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவமானது எமது நீண்டகால கோரிக்கைகளான, ஆயுத படையினரை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும், சர்வதேசத்தினால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும். இதில் சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளினை மீண்டும் வலுப்படுத்தியுள்ளதென சர்வ மதத்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளன.


No comments