யாழில் காரினை மோதித் தள்ளி, காரில் பயணித்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல்!


கார் ஒன்றினை துரத்தி வந்து பட்டா வாகனத்தால் மோதி விபத்தினை ஏற்படுத்தி , காரில் பயணித்தவர்கள் மீது சரமாரியான வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் காரில் பயணித்த நால்வர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

சுன்னாகம் பகுதியில் சன நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் வேகமாக வந்த காரினை பின் தொடர்ந்து துரத்தி வந்து , காரினை பட்டா வாகனத்தால் மோதி விபத்தினை ஏற்படுத்தி , பட்டா வாகனத்தில் வந்தவர்கள் காரில் இருந்தவர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு வன்முறை குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளே குறித்த வாள் வெட்டுத் தாக்குதலுக்கு காரணம் என தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments