பத்து சதமுமில்லை:வறுமையில் மைத்திரி!ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்காததற்காக உச்ச நீதிமன்றம் வழங்கிய 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்குவதற்காக மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதற்காக நிதியமொன்றை அமைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி, நட்டஈட்டை செலுத்தும் திறன் தமக்கு இல்லாததால் மக்களிடம் பணம் வசூலிக்க தீர்மானித்ததாக தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

 10 கோடி கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. 10 கோடி கொடுக்க எனக்கு பண பலம் இல்லை. மக்களிடம் 10 கோடி வசூலிப்பேன் என்று நம்புகிறேன். என்னிடம் மோட்டார் சைக்கிள் கூட இல்லை. எல்லா இடங்களிலும் பணம் வசூலிக்க வேண்டும். நான் பணத்தை கொடுக்கவில்லை என்றால், நான் சிறைக்கு செல்வேன்.

நாங்கள் சகோதரர்களாக இருந்தாலும் டட்லி சிறிசேனவின் தொழிலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் குடும்பத்தில் 11 பேர் உள்ளோம். எனது தந்தைக்கு 05 ஏக்கர் நெற்பயிர்களும் 03 ஏக்கர் காணியும் இருந்தது. அந்த 5 ஏக்கர் காணி எனது சகோதரிகளுக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அந்த மூணு ஏக்கர் நிலத்தில் மாம்பழம் பயிரிட்டேன். வேற வருமானம் இல்லை…

No comments