ஜெய்சங்கர் வருகையில் யாழில் ஆர்ப்பாட்டம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ´இலங்கையை கடனில் இருந்து மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளில் வெற்றிகரமான நடவடிக்கையாக அவரது வருகை இருக்கப்போகிறது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க அரசின் அரசியல் பழிவாங்கல் கைதுகளை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை யாழ். பல்கலைக்கழக நுழைவாயிலில் முன்னெடுத்துள்ளனர். மாணவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே தேசிய பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் அவருக்கு எதிராக யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமிகள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் இன்னமும் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தமது கற்றல் செயற்பாடுகளை கைவிட்டு மாணவர்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


No comments