பிரித்தானியக் குடிமக்கள் இருவர் உக்ரைனில் பலி!!


கிழக்கு உக்ரைனில் காணாமல் போனதாகக் கூறப்படும் பிரித்தானியக் குடிமக்களான கிறிஸ் பாரி மற்றும் ஆண்ட்ரூ பாக்ஷா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாக்ஷா (வயது 4)7, மற்றும் பாரி (வயது 28) ஆகியோர் கடைசியாக ஜனவரி 6 ஆம் திகதி சோலேடார் நகருக்குச் சென்று கொண்டிருந்தனர்.

பாக்ஷாவின் குடும்பத்தினர் கூறுகையில்,

இருவரும் வயதான பெண்ணை மீட்க முயன்றபோது, ​​அவர்களது மகிழுந்தில் எறிகணை வீழ்ந்து வெடித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் வெளியேற்றும் முயற்சியின் போது அவர்கள் இறந்துவிட்டதாகக் கூறினர்.

சோலேடார் தீவிர சண்டையின் மையமாக இருந்தது, இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவின் இராணுவம் நீண்ட போருக்குப் பிறகு உக்ரேனிய உப்பு சுரங்க நகரத்தை கைப்பற்றியதாகக் கூறியது.

No comments