மீண்டும் வர்த்தமானி அரசியல்!



ஒருபுறம் தேர்தல் மறுபுறம் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ப்பில் இலங்கையில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

இந்நிலையில் மின்சாரம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் இரண்டாம் பிரிவிற்கு அமைய இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கிணங்க,

1. மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல வேவைகள்,

2. பெற்றோலிய உற்பத்திகள் – எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம்,

3. வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, சிகிச்சையளித்தல்


ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன

No comments