பருத்தித்துறை சிறுமி வன்புணர்வு ; பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை 2 வருட காலமாக தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர்  17 வயதான சிறுமி (தற்போது 19 வயது) ஒருவரை நிவாரணம் தருவதாக அழைத்துச் சென்று, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, அதனை காணொளி பதிவுகளை எடுத்து, காணொளியை கட்டி மிரட்டி கடந்த இரண்டு வருட காலமாக வன்புணர்ந்து வந்த நிலையில், கடந்த வாரம் சுகயீனமடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சையின் போது , பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தமை கண்டறியப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது , பொலிஸ் உத்தியோகஸ்தர் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமை தெரிய வந்ததை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்து வந்த பருத்தித்துறை பொலிஸார் , பொலிஸ் உத்தியோகஸ்தரை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments