தகுதியோ உரிமையோ எவருக்கும் இல்லை?இலங்கையில் வாக்களிக்கும் உரிமை மக்களின் அடிப்படை உரிமையாக இருப்பதால் தேர்தலை ஒத்திவைக்கும் தகுதியோ உரிமையோ எவருக்கும் இல்லை என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

சிறிது தாமதம் ஏற்பட்டாலும் கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தாம் நம்புவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தமக்கு விருப்பமான ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும் என தெரிவித்த கிரியெல்ல அதனை தடுப்பது ஜனநாயக விரோதமானது எனவும் தெரிவித்தார்.

No comments