கொள்ளையில் வெளிநாட்டவர்கள்?

இலங்கையின்  பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் வங்கி கிளைகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை ஹிக்கடுவை, காலி, பத்தேகம பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களிலிருந்து  பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.அதிகாலையில் குறித்த ஏ.டி.எம். இயந்திரங்களுக்கருகில் வருகை தந்த வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் பிரஜைகளால், அங்கு காணப்பட்ட சி.சி.டி.வி. கமராக்களை செயலிழக்கச் செய்து, ஏ.டி.எம். இயந்திர தரவுகளை மாற்றி இவ்வாறு பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த மூன்று பிரதேசங்களிலுமே ஒரு முறையில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளமையால், ஒரே தரப்பினரே அனைத்து கொள்ளையுடனும் தொடர்புபட்டுள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.


No comments