வந்தே மாதரம்:வருகின்றது தமிழீழம்

 


யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 74 வது குடியரசு தின விசேட நிகழ்வு இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற போது தாம் எழுந்து நின்றது இந்திய தேசிய கீதத்திற்கே.சிலர் தவறாக இலங்கை தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றதாக தெரிவிப்பதாக மறுதலித்துள்ளனர் கட்சி விசுவாசிகள்.

13 ஐ ஆதரிப்பவர்கள் இந்தியாவின் கைக்கூலிகள், இந்தியா தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் தள்ளுகிறது, என அடிக்கடி பேசிவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்திருந்து நிகழ்வை சிறப்பித்தது தான் வேடிக்கையாக இருக்கிறது. குறித்த நிகழ்வில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச திணைக்களங்களின் தலைவர்கள் முப்படைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  

இந்நிலையில் முன்வரிசைக்கு ஓடிவந்து அமர்ந்து பின்னர் அவிழ்த்துவிட்ட கதைகளே சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.


No comments