வெடித்தது வேட்டை துப்பாக்கியாம்!தென்மராட்சியின் கொடிகாமம் - மிருசுவில் வடக்கு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 34 வயதுடைய பொதுமகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சாவகச்சேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே மோட்டார் சைக்கிளில் தனது விவசாய நிலத்திற்குச் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் அவர் வைத்திருந்த வேட்டைத்துப்பாக்கி வெடித்து  மரணித்திருக்கலாமென சந்தேகிக்கிக்கப்படுகின்றது.

அதேவேளை யாழ்.நகரில் இலங்கை இராணுவத்தின் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குடும்பஸ்தரான சவரிமுத்து சகாயரூபன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துக்கு உள்ளாகியவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து யாழ்.நகரின் வைத்தியசாலை வீதியின் வேம்படிச் சந்தியில் கடந்த 20ஆம் திகதி நடந்துள்ளதாக தெரியவருகின்றது.


No comments