பாதாள உலக கும்பல் :தெரியாதென்கிறார் சுகாஸ்பாதாள உலக கும்பல்களுடன் தான் தொடர்புபட்டுள்ளதான குற்றச்சாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மறுதலித்துள்ளார்.

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு  சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலக கும்பலினை சேர்ந்தவர்கள் தேடப்பட்ட நிலையில் இலங்கை காவல் நிலையத்தில் சரணடைந்ததற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்திலே திட்டமிட்ட வகையிலே பொய்யான செய்திகளை தங்களுடைய  நலன்களுக்காகவும் தங்களுடைய நிகழ்ச்சிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் வெளியிட்டு வருவதாகவும் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர மிகுதி அனைத்து கட்சிகளும் ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வை ஏற்பதற்கு உடன்பட்டு உள்ள நிலையில் தமிழ் மக்களிற்கு சமஸ்டி தீர்வை வலியுறுத்துகின்ற ஒரே ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே செயல்படுகின்றது. வெளிநாடுகளின் செயற்பாடுகளுக்கு ஒத்துப்போகாது உள்ள கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணியாகும். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நெருங்க முடியாத சில தரப்புகள் தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்து முகமாக பொய் செய்திகளை பிரசுரித்துள்ளதாகவும் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
No comments