தண்ணீர்:தள்ளாடும் யாழ்ப்பாணம்?

 


யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவளான் பகுதியில் கம்பியால் தாக்கப்பட்டு 29 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (26) குறித்த நபர் வீதியில் சென்று கொண்டிருந்த போது, ​​போதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த இருவர் இவருடன் தகராறு செய்து, தகராறு கைகலப்பாக மாறி, குறித்த நபரை கம்பியால் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் அயலவர்களால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நிரோஜன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தப் படுகொலை தொடர்பில் இருவர்  பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.


பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனும் 20 வயதுடைய இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments