இலங்கை மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிராகரிப்பு!


இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மறுப்பு தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது. மின்வெட்டினை வழமைப்போலவே தொடர இருப்பதாக தெரிவித்து அதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரியது.

இருப்பினும் மின்சார சபையின் கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் உரிமைகளை மீற முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments