மணி நீதிமன்றில்:ஆளுநர் அம்பலப்படுவாரா?
யாழ்ப்பாண மாநகர முதல்வராக மீண்டும் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணனால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வடமாகாண ஆளுநர் தலையீடு அம்பலமாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் கட்டளை சட்டத்தின் படி ஒரு முதல்வரை தேர்வு செய்ய முடியாது, பாதீடு தோற்கடிக்கப்பட்ட ஒருவர் முதல்வராக தெரிவு செய்வதற்கு இடம் இல்லை, அத்தோடு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சபையில் கோரமில்லை என அறிவித்துவிட்டு சென்று சூட்சுமமான முறையில் வர்த்தமானி பிரசித்தமை போன்ற மூன்று விடயங்களுக்கு எதிராகவும் இன்றைய தினம் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக வடமாகாண ஆளுநரது அழுத்தத்தினாலேயே மீண்டும் முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தது.

வுடமாகாணசபையின் உள்ளுராட்சி ஆணையாளரிற்கு ஆளுநர் விடுத்த அழுத்தங்களையடுத்தே மீண்டும் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டதாக வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.எனினும் அத்தகைய குற்றச்சாட்டை வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா மறுதலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments