யாழில் கட்டுப்பணத்தை செலுத்தியது தேசிய மக்கள் சக்தி!


தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் வியாழக்கிழமை செலுத்தியது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினரால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

வலிவடக்கு பிரதேச சபை, வலிமேற்கு பிரதேச சபை, யாழ் மாநகர சபை சாவகச்சேரி நகரசபை, காரைநகர் பிரதேச சபை உள்ளிட்ட ஐந்து சபைகளுக்கு இதன்போது தேசிய மக்கள் சக்தியால் கட்டு பணம் செலுத்தப்பட்டது.

முதலாவது அரசியல் கட்சியாக தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

மேலும் சில சுயேச்சைக்குழுக்கள்  யாழ்ப்பாண மாவட்டத்தில் சில பிரதேச சபைகளுக்காக இதுவரை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

No comments