தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரிய உணவு தவிர்ப்பு ; புதுக்குடியிருப்பில் கடையடைப்பு!
தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றிணையக் கோரி முன்னாள் போராளியும் சமூக செயற்பாட்டாளருமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முன்னெடுத்து வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.
நீராகாரம் உணவு ஏதுமின்றி கடந்த 09ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்றைய தினம் புதுக் குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளது.
அதேவேளை புதுக்குடியிருப்பு முச்சக்கர வண்டிகள் சங்கத்தினரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
Post a Comment