போதைக்கு அடிமையான நிலையில் வவுனியாவில் புனர்வாழ்வு பெற்று வந்தவர் உயிரிழப்பு!


ஐஸ் போதைப்பொருள் பாவனையால் நுரையீரல் உள்ளிட்ட உடற்பாகங்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். 

மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். 

போதைப்பொருளை அடிமையாகிய நிலையில் நீதிமன்ற உத்தரவில் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். 

புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெரும் வரும் வேளை உடல்நல குறைப்பாடு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். 

அதிகரித்த ஐஸ் போதைப்பொருள் பாவனை காரணமாக நுரையீரல் உள்ளிட்ட உடற்பாகங்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர். 

No comments