வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் தீக்கிரை!


வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில், மோட்டார் சைக்கிள் திருத்தகம் ஒன்றில், திருத்து வேலைகளுக்காக நிறுத்தப்பட்ட பிளசர் ரக மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியெரிந்தது.

 அதனை அடுத்து, அங்கிருந்தவர்கள்  அசாம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் முகமாக, மோட்;டார் சைக்கிளை திருத்தகத்திலிருந்து அகற்றி, வீதிக்கு கொண்டு வந்து, தீயைக் கட்டுப்படுத்த முயற்சியெடுத்தனர். 

முயற்சிகள் பலனளிக்காத நிலையில், மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து தீக்கிரையானது. 

No comments