திருவடி நிலையில் கடற்தொழிலாளர் சடலமாக மீட்பு


யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடற்கரையில் மீனவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த கணபதி தவம் (வயது 58) என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுழிபுரம் பகுதியில் இருந்து நேற்றைய தினம் திங்கட்கிழமை கடற்றொழிலுக்கு சென்றவர் கடலில் மூழ்கி காணாமல் போன நிலையில், இன்றைய தினம் திருவடி நிலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

No comments