பொங்கு தமிழ் நினைவு தினம்!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட பொங்குதமிழ் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை நினைவு கூரும் வகையில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவுநாள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபிக்கு முன்பாக நிகழ்வுகள் நடைபெற்றது.

அதன்போது, பொங்குதமிழ் தொடர்பான நினைவுரை மற்றும் பொங்குதமிழ் பிரகடனத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவுநாள் ஊடக அறிக்கை வெளியீடு என்பன இடம்பெற்றது.

2001 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை,  மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி  சர்வதேச சமூகத்தை தமிழர் தேசத்தின் பால் திரும்பிப் பார்க்கும் வகையில்  யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் பிரகடனம் தூபியாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments