வெற்றிலை துப்பிய யாழ்.பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக நடவடிக்கை


யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் வெத்திலை சாப்பிட்டவாறு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொறுப்பதிகாரியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலைய பிரதான வாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் வெற்றிலை சாப்பிட்டவாறு கடமையில் இருந்ததுடன் பொலிஸ் நிலையத்திற்கு வருவோரிடமும் மரியாதை குறைவாகவும் நடந்து கொண்டுள்ளார்.

அது தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, உடனடியாக குறித்த உத்தியோகஸ்தரை கடமையில் இருந்து நீக்கி, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாக உத்தியோகஸ்தருக்கு, பொறுப்பதிகாரி பணித்துள்ளார்.

No comments