மியான்மார் அகதிகளை நாடு கடத்த முற்பட்டவருக்கு விளக்கமறியல் நீடிப்பு


மியான்மார் அகதிகளை நாடு கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியலை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நீடித்து மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

இந்தோனேசியாவில் இருந்து படகில் தப்பி செல்ல முற்பட்ட வேளை கடந்த 17ஆம் திகதி படகு பழுதடைந்ததில் , வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தத்தளித்த நிலையில் 104 ரோஹிங்கிய அகதிகள் இலங்கை கடற்படையினாரால் காப்பாற்றப்பட்டு , மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை மீரிகான தடுப்பு முகாமில் தடுத்து வைக்க நீதிமன்று உத்தரவிட்டது. 

அதேவேளை இவர்களை நாடு கடத்த முற்பட்டவர் என ஒருவருக்கு எதிராக காங்கேசன்துறை பொலிஸாரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற விசாரணைகளை அடுத்து அவரை கடந்த 2ஆம் திகதி வரையில் வைக்குமாறு விளக்கமறியலில்  நீதிமன்று உத்தரவிட்டது. 

கடந்த 2ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து , சந்தேக நபரின் விளக்கமறியலை  எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. 


No comments