போதைக்கு அடிமையானவர் சிகிச்சை பலனின்றி யாழ்.போதனாவில் உயிரிழப்பு!


போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நபர் ஒருவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் கொடிகாமம் வரணி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை சந்தேகநபரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. 

இந்நிலையில் , கடந்த 10ஆம் திகதி சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இறப்பு விசாரணைகளின் போது , அளவுக்கு அதிகமான  போதைப்பொருள் பாவனை காரணமாகவே சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments