யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக போதைப்பொருள் விற்பனை - ஒருவர் கைது


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கடையொன்றில் போதைப்பொருளை விற்கும் நோக்குடன் அதனை உடைமையில் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கடையொன்றில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , கடையில் சோதனை நடாத்திய வேளை , அதன் உரிமையாளரின் உடைமையில் இருந்து 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டனர். 

அதனை அடுத்து உரிமையாளரை கைது செய்யாத பொலிஸார் , அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை கொழும்பில் இருந்து போதைப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததாக தமது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் , அவருடன் தொடர்புடைய போதைப்பொருள் வலையமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments